அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் எண்ணக்கருவிற்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்காக அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியத்தொகை, குறைந்த வட்டியிலான கடன் வழங்கும் ஆரம்பநிகழ்வு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (2022.02.14) காலை பத்து மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ்.நகர் கிழக்கு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதுடன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ்ப்பாண பிரதேச செயலர், மாவட்ட சமுர்த்திக் கணக்காளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
2022ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு இணங்க சமுர்த்தி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






