புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதி அனுசரணையில் சண்டிலிப்பாய், மருதங்கேணி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட "கலாசார மத்திய நிலையங்களின் திறப்புவிழா" தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 21.02.2022 அன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் ஹெட்டியாராச்சி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.முரளிதரன் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மருதங்கேணி உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும், கலாசார மத்திய நிலையங்களின் திறப்புவிழாவானது 2022.03.05 அன்று சண்டிலிப்பாய் பிரதேசத்தில் காலை ஒன்பது மணிக்கும், மருதங்கேணி பிரதேசத்தில் மதியம் ஒரு மணிக்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21culcen