எதிர்வரும் மார்ச் 11,12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 28.02.2022 காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில்,தற்போதுள்ள கொரோனா இடர் நிலையில் உற்சவத்தில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை, நீர் வழங்கல் வசதி, சுகாதார ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள் , உணவு ஏற்பாடுகள், உள்ளக பாதுகாப்பு ஏற்பாடு ,ஒளி ஒலி வழங்கல் ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி ஏற்பாடுகள், படகு வசதிகள்,ஊடகங்களுக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இவ் உற்சவ நிகழ்வை நடாத்த தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர், இந்திய துணைத் தூதுவர், கிறிஸ்தவ மத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் , உதவி மாவட்டச்செயலாளர்,ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், கடற்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர், பிரதேசசபை பங்குதாரர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட துறைசார் பங்குதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
 28kacha1 28kacha2 28kacha3