யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் "யாழ். மாவட்டச் செயலக மடல்" இன்றையதினம் 2022.03.01 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியீட்டுக் குழு சார்பில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிற்கு வழங்கி வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இவ் யாழ்.மாவட்டச் செயலக மடலானது 2021 ஆண்டின் தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரையிலான யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் வெளியீட்டில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்

  Click On Book To Read More.....
1 1bookre