யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும்,கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் 15.03.2022 அன்று யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், இம் மீளாய்வுக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலமை மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.






