அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.03.2022) காலை ஒன்பது மணிக்கு யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வில் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், முன்னாள் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான திருமதி. இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் யாழ்.பேரூந்து நிலையத்தின் முகாமையாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், இவ் விழிப்புணர்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான STICKERS வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது






