யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 29.03.2022 காலை 10 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகளான பிறப்பு பதிவு செய்வதிலுள்ள பிரச்சனை, சிறுவர்களின் பாதுகாப்பு குறைபாடு , சிறுவர்களை வைத்து யாசகம் பெறுதல் அதிகரித்துள்ளமை, பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம், பாதுகாப்பற்ற கிணறுகள் மற்றும் குளங்களினால் சிறுவர்கள் இறப்பு, சிறுவர் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை, உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவிட வசதிகளின்மை ஆகியன தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, எதிர்காலத்தில் இப் பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தெரிவு செய்யப்பட்ட சில கிராமங்களில் நேரடியாக களவிஜயம் செய்து விஷேட கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.இக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர்,சட்ட வைத்திய அதிகாரி, கல்வித் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அத்தியட்சகர், சிறுவர் மற்றும் பெண்கள் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்

29child3 29child2 29child1