யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் எவ்வாறு தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளல் தொடர்பான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 22.4.2022 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேலும், வளவாளர்களாக வைத்திய கலாநிதி DR.S.சிவதாஸ் , DR.A.வினோதா ஆகியோரினால் மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கருத்தமர்வு இடம்பெற்றது. அத்தோடு எதிர்காலச்செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி எஸ்.சி.என் கமலராஜன், வலயக்கல்வி உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை இணைப்பாளர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

 21schstu1 21schstu2 21schstu3