நல்லூர் பிரதேச சபை உள்ளூர் அபிவிருத்தி ஆதரவுத்திட்டத்தின் கீழ் (LDSP) கைத்தொழில் அபிவிருத்தி சபை இணைந்து நடாத்தும் " அடிப்படை கணனிப் பயிற்சி" ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் மாவட்ட முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் திரு.சசிகரன், தொழில்முயற்சி ஊக்குவிப்பு முகாமையாளர் திருமதி. ர.சிவராணி மற்றும் கௌரவ தவிசாளர் (நல்லூர் பிரதேசசபை), வளவாளர்களாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.மேலும், இப் பயிற்சிநெறி 22.03.2022 ஆம் திகதியிலிருந்து 25.04.2022 வரை பதினைந்துநாட்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 25Training1 25Training2 25Training3