யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையும் இணைந்து நடாத்திய "மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் ஒன்று கூடல் விழா" மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையின் தலைவர் சுப்பையா பரம்சோதி அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (03.05.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதியோர்களை முன்னிலைப்படுத்தி முதியோர்நடனம், முதியோர் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு பரசில்களும், அன்பளிப்புக்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் வழங்கப்பட்டன.
அத்துடன் யாழ் மாவட்ட 15 பிரதேச செயலகங்களிலிருந்தும் வறுமைக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஸ்ட பிரஜை ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 2500/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் (சிறப்புவிருந்தினர்), வாழ்நாள் பேராசிரியர் திரு.பாலசுந்தரம் பிள்ளை ( யாழ்.பல்கலைக்கழகம்) திரு. தம்பியையா கனகராசா( அத்தியட்சகர் அரச முதியோர் இல்லம் கைதடி), உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையின் அங்கத்தவர்கள், மற்றும் கிராமிய, பிரதேச மட்ட முதியோர் சங்க அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

3elder2 3elder3