யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப்போட்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (26.05.2022) யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம் மற்றும் வடமாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் செல்வி. அகல்யா சேகராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வேல்ட் விசன் மாவட்ட முகாமையாளர் திரு.அ.யூட் நிசாந்தன் மற்றும் இதம் நிறுவன முகாமையாளர் திருமதி.தனபாலசிங்கம் சுமதி மற்றும் கிருபா சாரதி பயிற்சி பாடசாலை உரிமையாளர் திரு.எ.கிருபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
அத்தோடு இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
26sports1 26sports2 26sports4
 
26sports3