விவசாய திணைக்களத்துடன் இணைந்து மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் நடாத்தும் "மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (03.06.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், விவசாயிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும் மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டத்தில் பயிற்றை, கத்தரி, புடொல், பாகல், சிறகவரை , வெண்டி, கீரை மற்றும் வல்லாரை, புதினா , அகத்தி, சிறுகுறிஞ்சா, முருங்கை , மரவள்ளி,வத்தாளை ஆகிய விதை மற்றும் நாற்றுக்கள் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.






