யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினரால் "சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு போதைப்பொருள் சவாலை கட்டுப்படுத்தல்" எனும் கருப்பொருளில் போதைப் பொருட்பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட உடனடி இலவச அழைப்பினை அறிமுகப்படுத்துதல் மற்றும் பேருந்துகளில் ஸ்டிக்கர்ஸ் காட்சிப்படுத்துதல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 27.06.2022 காலை 9.30 மணிக்கு யாழ்.பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ் முரளிதரன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை மாவட்ட இணைப்பாளர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், மாவட்ட/ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்விற்குஅரச சார்பற்ற நிறுவனங்களான வேல்ட்விசன் மற்றும் சாந்தீகம் ஆகியன அனுசரணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.






