வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மாவட்ட செயலக விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய மரக்கறி நாற்றுகள் நாட்டப்பட்டு அதன் அறுவடை நிகழ்வு (09.08.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வி்ல் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் குறித்த மரக்கறி உற்பத்தி நடவடிக்கைளை விரிவுபடுத்தும் ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்,மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

9agri2 9agri1