வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மாவட்ட செயலக விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பழமரக்கன்றுகள் நாட்டப்படும் நிகழ்வு (10.08.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி கணக்காளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






