யாழ்.மாவட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம் (16.08.2022 ) யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரின் இணைத்தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி),மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், இ.போ.ச பிராந்திய முகாமையாளர், திணைக்கள தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், உள்ளிட்ட துறைசார் தரப்பினர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. எரிபொருள் தேவையுடைய இயந்திரங்களுக்கான QR பதிவு நடைமுறைகள்,பேக்கரி உற்பத்தியாளர்களுக்கான எரிபொருள் விநியோக நடைமுறைகள், கடற்தொழில்,விவசாய நடவடிக்கைகளுக்கு போதிய எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை , திருமண மண்டபம் ஹோட்டல்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் பாரவூர்திகளுக்கான எரிபொருள் தேவைப்பாடுகள் மற்றும் சிறு கைத்தொழில் துறையினர், வீதி அபிவிருத்தி பணி நிறுவனங்கள், நிர்மாணப்பணி நிறுவனங்களுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.