யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவை செயற்பாட்டு குழு கூட்டம் (16.08.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் நடப்பு வருடத்திற்கான செயற்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இவ்வருடத்திற்கான மாவட்ட பண்பாட்டு விழா ஏற்பாடுகள், கலைத்திறன் போட்டிக்கான விண்ணப்ப நடைமுறைகள்,நூல் வெளியீட்டு விழா ஏற்பாடுகள்,புதிய யாப்பு திருத்த விடயங்கள்,அங்கத்தவர் சந்தா விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,உதவி மாவட்டச்செயலாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், கலைஞர்கள் உள்ளிட்ட கலாசார துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்






