டிஜிற்றல் மாவட்ட அபிவிருத்தி முயற்சியை ஔியூட்டும் நோக்கில் மாவட்ட டிஜிற்றல் பரிமாற்ற குழுவை நியமித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.08.2022 அன்று காலை மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையமானது (ICTA) டிஜிற்றல் தந்திரோபாய பொருளாதாரத்தை அடையும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பிரதான ஆரம்ப முயற்சியாக அபிவிருத்தியை அடையாளப் படுத்தியுள்ளது.இதற்காக இதன் தொடர்ச்சியாக டிஜிற்றல் மாவட்ட தொழிற்பாட்டை விருத்தி செய்யும் நோக்கில் அனைத்து பிரதான பங்குதார்களின் பங்களிப்புடன் மாவட்ட டிஜிற்றல் பரிமாற்றக்குழு உருவாக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக யாழ்மாவட்டதின் பல்வேறு துறைககளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை நடைமுறைப் படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும்( Regional cluster development மனோஜ் கேமரத்னகே) அவர்களினால் நிகழ்த்துகை நடாத்தப்பட்டு தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , சிரேஷ்ட முகாமையாளர் மனோஜ் கேமரத்னகே -ICTA -(Regional cluster development) உதவிப்ணிப்பாளர், ரி.தேவராஜா (ICTA), ( மாகாண கல்வித் திணைக்களம்), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் , தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசாா் வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.






