மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (16.09.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரச காணிகளை அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு வழங்குதல் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக காணிகளை கையளித்தல், காணிகளை பாராதீனப்படுத்தல், நீண்ட கால குத்தகைக்கு வழங்குதல், காணிக் கச்சேரி மூலம் காணி வழங்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), காணிப் பயன்பாட்டு திட்டமிடல் அலுவலக உதவிப் பணிப்பாளர், மாவட்டசெயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் திணைக்களங்களின் துறைசார் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

 16luse3 16luse2 16luse1