யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (27.09.2022) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான நெல், சோளம் என்பவற்றிற்கான உரவிநியோகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இவ் உர விநியோகத்தில் 70 சதவிகிதம் இரசாயனமும், 30 சதவிகிதம் சேதனப் பசளையும் விநியோகிக்க விவசாய அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப 30 சதவீத சேதனப் பசளை விநியோகிக்கும் நிறுவன விநியோகஸ்தர்களை விவசாயிகளே தேர்ந்தெடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இக்கலந்துரையாடலில் சேதனப் பசளை விநியோகஸ்தர்களின் சேதனக் கலவையின் அளவு, தரம், விலை, உள்ளீடுகள், கால அளவு, பாவனை முறை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.மேலும், இக்கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர், உர விநியோக நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்





