சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் "கிராமத்திற்கு தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்" (28.09.2022) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வட மாகாணத்தில் தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தல், தகவலறியும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆணைக்குழுவின் கடமை பொறுப்புகள், தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான அடிப்படை அறிமுகம் மற்றும் மக்கள் தகவலறியும் சட்டத்தை சட்டத்தை பயன்படுத்தல், தகவல் சட்டத்தின் வகிபாகம், தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தல் மற்றும் தகவலறியும் சட்டம்தொடர்பாக வழிகாட்டுதல், தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் மற்றும் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்குரிய விண்ணப்பங்களை தயாரிப்பதற்கு மக்களுக்கு வழிகாட்டுதல் போன்ற விடயங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் அரச அதிகாரிகள் தகவலறியும் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் ஆகியனவும் கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன், தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவரும் நீதிபதியும் திரு.உபாலி அபேரத்ன (ஓய்வு நிலை), தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி கிஸாலி பின்ரோ, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.முகமட் நகியா, தகவலறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் (பதில்) திரு.எஸ்.ஆர்.டபிள்யூ.எம்..ஆர்.பி. சத்குமார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியனாராட்சி,

மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் .எஸ்.ரகுராம் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், தகவல் உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
28rti1 28rti2 28rti3