உலக உளநல நாள் மற்றும் தேசிய உளவளத்துணை நிகழ்ச்சி யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (19.10.2022) மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க. சிவசுதன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட உளவியல் விரிவிவுரையாளர் திரு க.கஜவிந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் மனிதன் உளநலம் பாதிப்பிற்கு உள்ளாகுவதாக இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.

தெளிவான திட்டமிடல் இல்லாமை, உறுதியான முடிவுகள் எடுக்கப்படாமை, எதிர்பார்ப்புகள் அளவுக்கு மீறி இருத்தல் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சந்தர்ப்பங்களில் மனிதனின் உளநலம் பாதிக்கப்படுகின்றது.சந்தேகம் மற்றும் மற்றவர்களுடன் ஒப்பிடுதல் போன்ற குணாதிசயங்களினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி மன அழுத்தம் ஏற்பட்டு உளநலம் பாதிப்படைவதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

மேலும் இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உளவள இணைப்பாளர், பிரதேச மட்ட உளவள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கொண்டிருந்தார்கள்.
19nalam1 19nalam2 19nalam3
19nalam4 19nalam5