சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுதாய மட்ட தலைவர்களுக்கான மாவட்ட மட்ட கலந்துரையாடல் (28.10.2022) காலை 9.00 மணி முதல் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளின் பங்களிப்பு, சமுர்த்தி கொடுப்பனவுகள், சமுர்த்தி வங்கிகளை இணையவழி நிகழ்நிலை வங்கிகளாக (Online system) மாற்றுதல், பிரதேச மட்டங்களிலும் பயிற்சி நெறிகளை நடத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், Samurthi e-collector எனும் செயலியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு.R.P.B.திலகசிறி, மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு.எஸ்.சத்தியசீலன், யாழ்.மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.T.விஸ்வரூபன், மற்றும் குறுநிதி பிரிவின் பணிப்பாளர், மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், சமுதாய அடிப்படை அமைப்பு விடயப் பணிப்பாளர்கள், சகல வாங்கிச் சங்க(மகாசங்க) நிறைவேற்று குழு தலைவர், பிரதேச மட்ட சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர் மற்றும் செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது