நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (30.10.2022) பிற்பகல் 3 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இம் முன்னாயத்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, மேலதிக செயலாளர் சமன் குமாரி, மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் கே.கமலரூபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சத்தியமூர்த்தி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
குறித்த நடமாடும் சேவை நாளைய தினம் (31.10.2022) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது






