யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாட்டுக் குழுக்கூட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (10.11.2022) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு தாழமுக்க காலநிலையால் ஏற்படக்கூடிய அதிகூடிய மழைவீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு , சூறாவளி, இடி முழக்கம், நகர்பிரதேசங்கள் நீரில் மூழ்குதல் ,இடிமுழக்கம் மின்னல் தாக்கம்,தொற்று நோய்கள் பரவுதல், டெங்கு பரவுதல், உயிரிழப்பு, சொத்து சேதம் போன்ற பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டினை மேற்கொள்ளும் நடவடிக்கைகைள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், யாழ் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரதேசங்கள் மற்றும் வீதிகள் இனங்காணப்பட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளல், மக்களுக்கான முன் எச்சரிக்கை, மாவட்ட மட்டத்தில் அவசரநிலைமை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கிராம ரீதியான முன்னாயத்தம், பாதுகாப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்தல், முப்படையினரின் பங்களிப்பு, நிவாரணங்கள் ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன







