யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் மரக்கறிகள் மற்றும் பழங்கள் நீரகற்றல் தொழில்நுட்ப மாற்றுப்பயிற்சி செயலமர்வின் ஆரம்பக்கட்ட நிகழ்வானது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (21.11. 2022) காலை 8.30 மணிக்கு யாழ்.மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வானது 21,22ஆம் திகதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் திணைக்களங்கள் சார்ந்த மேலதிக ஆலோசனைகளை வழங்கியதோடு தொழில் முயற்சியாளர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும் எனவும் நிபுணத்துவம் சார்ந்தவர்களை அணுகி தொடர்புகளை ஏற்படுத்தி தொழிலை விரிவாக்கம் செய்வதனூடாக வெற்றி இலக்கை அடைய முடியும் ,இதற்கு துறைசார் திணைக்களங்கள் ஊக்குவிப்புக்களை வழங்கும் எனவும் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர்,ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட விதாதா உத்தியோகத்தர், தொழில் முயற்சியில் ஈடுபடும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






