சமுர்த்தி தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கருத்திட்ட முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. T.விஸ்வரூபன் தலைமையில் (24.11.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக உதவிகளைப் பெற்று வாழ்வாதாரத்தை முன்னேற்றிவரும் தொழில் முயற்சியாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களுக்கும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்களுக்குமான ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் "தொழில் முயற்சியாளர்களுக்கு சரியான தொழில்நுட்பமின்மை ,சந்தர்ப்பங்கள் கிடைக்காமை, வழிகாட்டலின்மை போன்ற காரணங்களால் தோல்வி அடைய நேரிடுவதாகவும், அவர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்குதல், வளங்களை உச்சமாக பயன்படுத்துதல், தொழில் பயிற்சிகளை வழங்குதல், தேவைகளை அறிந்து அவர்களுக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை பிரதேச மட்டங்களில் கருத்திட்ட முகாமையாளர்கள் ஏற்படுத்துவதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியும்" எனக் கூறினார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் கருத்து தெரிவிக்கும் போது சமுர்த்தி வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பிரதேச மட்டங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் ஊக்குவிப்பு சிறப்பானதாக காணப்படுகின்றதாகவும், இலவசமாக கிடைக்கும் பெறுமதிகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை மக்கள் தேடிப் போகும் தன்மை அதிகரித்துள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு இவ்வாறான பொருட்களுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், இதற்கு பிரதேச மட்ட கருத்திட்ட முகாமையாளர்கள் வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும்" என்றும் கூறினார்

மேலும், இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர், மாவட்ட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,தொழில் முயற்சியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்
 
24samur1 24samur2 24samur3
 
24samur4 24samur5