நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தள உத்தியோகத்தர்களுக்கான அஸ்வசுமா மொபைல் அப் (Aswasuma mobile app ) தொடர்பான பயிற்சி நெறி யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 05.12.2022 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான ஒருநாள் பயிற்சி நெறி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட செயலக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகத்தர், பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்

5asw1 5asw2 5asw3