யாழ்.மாவட்ட செயலக உத்தியாகத்தர்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (08.12.2022) வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே ஆரோக்கியமான வேலைச்சூழலை ஏற்படுத்தும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு , விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். சபாநாத் அவர்களினால் உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலான எண்ணக்கருக்கள், உடற்பருமனை குறைப்பதற்கான உணவு எடுத்துக் கொள்ளும் அளவு, உடற்பயிற்சிகள், யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சிகள், மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதற்கான தீர்வுகள் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

8ds1 8ds2 8ds3