யாழ்ப்பாண மாவட்ட உளவியல் சமூக மன்ற கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் (15.12.2022) யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
போதைப்பொருளிலிருந்து எவ்வாறு விடுபடுவது தொடர்பான உளவளத்துணை வழிப்படுத்தல்களை மேற்கொள்ளல் , சிறுவர்களின் தொலைபேசிப் பாவனை, சமகால நெருக்கடிகளுக்கான உள ஆற்றுப்படுத்தல்கள்,மாவட்ட மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளை குழுக்களாக இணைந்து இனங்காணுதல் , பாடசாலைகளில் அறநெறி வகுப்புக்களை நடாத்தும் திட்டங்களை முன்னெடுத்தல், பிள்ளைகளை போதைப் பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்து நெறிப்படுத்தலுக்கான உளவளத்துணை ஆலோசனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் அவர்கள் போதைப்பொருள் பாவனையிலிருந்து எமது சமூகம் விடுபட தடுக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளதாகவும் பிள்ளைகளில் ஏற்பட வேண்டிய மன மாற்றம் முதலில் குடும்ப மட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள்,உளவளத்துணை உதவியாளர்கள் , அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர்கள், மாவட்ட செயலக உளவளத்துணை இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






