யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 16.12.2022 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
அரசசார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி , நலனோன்புத்திட்டங்கள், கல்வி ,சுகாதாரம், சூழல் , பெண்கள், சிறுவர்கள் போன்ற பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்த கால 2022 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள், 2023 ஆம் ஆண்டுக்கான எதிர்கால திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், இதர பங்காளர்களின் பங்களிப்பு , பிரதேச மட்டத்தில் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர், துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
 
16ngmeet