யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 16.12.2022 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சண்டிலிப்பாய், கோப்பாய்,வேலணை,ஊர்காவற்துறைமருதங்கேணி, சங்கானை ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அனுமதி பெறப்படவேண்டிய விடயங்கள், காணிக்கச்சேரி மூலம் காணி வழங்க அனுமதி கோரல்,பிரதேச சபைக்கு பாரதீனப்படுத்தும் காணிகள் தொடர்பானவை, அரச காணிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் குடியிருப்பதற்கான காணி வழங்கல், குறுங்கால, நீண்ட கால குத்தகையில் காணி வழங்கல், கடலட்டை வளர்ப்பதற்கும், கடற்கொட்டகை அமைக்கவும் விண்ணப்பித்த நபர்களிற்கு வருடாந்த அனுமதிப்பத்திரம் ஊடாக வழங்க சிபாரிசு கோரல், யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு விசேட அளிப்பு மூலம் காணி வழங்கல், காணியை கையளித்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் வலயமாக்கல் திட்ட வரைபு முன்வைப்பு, மாவட்ட வலயமாக்கல் திட்டத்தின் அவசியம், அடையாளப்படுத்த வேண்டிய திட்டங்கள் , மாற்றியமைக்கப் படவேண்டிய நிலப்பயன்பாடுகள், எதிர்கால அபிவிருத்தி இடங்களை அடையாளம் காணல் பங்குதாரர் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு உதவிப்பணிப்பாளர் , துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்





