உத்தியோகத்தர்களுக்கான CBR வலுவூட்டல்திறன் விருத்தி பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன் அவர்களின் தலைமையில் 27.12.2022 காலை 9.00 மணிக்கு மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
fairmed நிறுவனத்தின் நிதி அனுசரணையில் உத்தியோகத்தர்களை சமூக மட்டத்திலான புனர்வாழ்வு நிகழ்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இப்பயிற்சி இடம்பெற்றது. அத்துடன் இப்பயிற்சி நெறியானது மூன்று நாள் பயிற்சி நெறியாக 27.12.2022 ஆம் திகதி தொடக்கம் 29.12.2022 திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது "அரச உத்தியோகத்தர்களிடம் அறிவு மற்றும் அனுபவங்கள் காணப்படுகிறது. இச் செயலமர்வு மூலம் அரச உத்தியோகத்தர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளமுடிவதோடு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கமுடியும் ஏனெனில் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி. எஸ்.சி.என். கமலராஜன் அவர்களிள் கருத்து தெரிவுக்கும் போது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களை வலுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இச் செயலமர்வு மூலம் உங்கள் சேவைகளை வினைத்திறன் மிக்கதாக மேற்கொள்ள உதவுமெனவும் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியில் வளவாளர் உள்வாங்கலுடன் கூடிய அபிவிருத்திக்கான நிபுணத்துவ ஆலோசகர் இரா.கலைவேந்தன் மற்றும் Fairmed நிறுவன இணைப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோா் கலந்து கொண்டனர்






