2022 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட மட்ட விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (29.12.2022) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.பாலன் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 2022ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவில் பதக்கப் பட்டியலின் அடிப்படையில் முதலாம் இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் இரண்டாம் இடத்தினை நல்லூா் பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) விவசாய பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக கணக்காளர்கள் , பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பரிசில் பெறுவோரும் கலந்து கொண்டனர்.

29sportsfes