யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் பிரிவுபசார விழா யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 30.12.2022 மு.ப 1.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மாவட்ட அரசாங்க அதிபராக 31.12.2022 வரை மகத்தான சேவையை மக்களுக்கு நல்மனதுடன் ஆற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் செல்லும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் சேவை நலன் பாராட்டு மற்றும் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்அவர்கள் மலர் மாலைகளும் பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்கஅதிபர்( காணி), திரு திருமதி க. மகேசன் தம்பதிகள், மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

30GAF1 30GAF2 30GAF3

30GAF4 30GAF5 30GAF6 30GAF7