B3S முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.01.2023) காலை 10:00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் B3S இன் நடைமுறை சிக்கல்கள் மற்றும் முன்னேற்றகரமான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆலோசனைகளும் கருத்துக்களும் zoom ஊடாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பதில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும்போது "கடந்த ஐந்து வருடங்களாக B3S னை அதிக பயனாளா்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தி கூடுதலான பயன்களைப் பெற்றுள்ளதுடன், இந்த B3S காலத்து காலம் புதுப்பிக்கப்பட்டு தரவுகளை உள்வாங்கி தொடர்ச்சியாக பயன்படுத்தி பயன்பெறுதல் வேண்டும். அத்தோடு B3S மென்பொருளை பிரதேசமட்டங்களில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றியையும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக கணக்காளர், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவி பிரதேச செயலாளர் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர், B3S விடய பதவி நிலை உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், நிர்வாக கிராம அலுவலர், Data Validation உத்தி யோகத்தர் மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் zoom செயலி ஊடாக கலந்து கொண்டனர்

9b3s1 9b3s2 9b3s3