உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களுக்கான உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (09.01.2023) காலை 9:30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் உலக உணவு திட்டம் மற்றும் வேர்ல்ட் விசனும் இணைந்து யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்த தெல்லிப்பழை, சங்கானை , வேலணை, மருதங்கேணி, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களிலுள்ள நலிவடைந்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதில் ஏற்படுகின்ற இடர்பாடுகள், குறிப்பாக விலை நிர்ணயம் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள், பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விதம் தொடர்பாக கலந்துரையாப்பட்டன.

இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,உலக உணவு திட்டபிரதிநிதி, வேர்ல்ட் விசன் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ,வேர்ல்ட் விசன் மாவட்ட இணைப்பாளர், கூட்டறவு அபிவிருத்திபிரதிநிதி,கூட்டுறவு சங்க முகாமையாளர்கள் களஞ்சிய உதவியாளர்கள்

10food1 10food4 10food3