யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (16.01.2023) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் யாழ் மாவட்ட செயலக நலன்புரிச் சங்க தலைவர் நிர்மல் தலைமையில் நடைபெற்றது.
அலுவலகத்தை ஒரு வீடாக அல்லது ஒரு குடும்பமாக நினைத்து நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற நேக்கில் இன்று இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது





