யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுற்றுத்துறையில் தற்போது மேற்கொள்ளவேண்டிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் 27.02.2023 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி பிரிவின் மாகாண பணிப்பாளர், கலாச்சார திணைக்கள மாகாண பணிப்பாளர், மருத்துவ பீடாதிபதி, சுதேச வைத்திய மாகாணப்பணிப்பாளர்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர், சமுத்திர பல்கலைக்கழக தொழில்நுட்ப உத்தியோகத்தர், வணிக கழக பிரதிநிதிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்





