யாழ் மாவட்ட செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரி கழக தலைவருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (26.04.2023) மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரி கழக போசகருமான அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உப போசகருமான ம.பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம் , கவிதை , நடனம் ,நாடகம், இசைநிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில், கா.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சித்திபெற்ற உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை கௌரவித்தல், ஓய்வு பெற்று சென்றோா், அரச சேவையில் வெள்ளி விழாவை பூர்த்தி செய்தோர், இடமாற்றம் பெற்று சென்றோா், போன்றோரை கௌரவித்தல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 26agt1 26agt2 26agt3

26agt4 26agt5 26agt6