யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 23.05.2023 காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விவசாய நடவடிக்கைகளிற்காக வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த வருடம் வீடமைப்பு கடனுதவிகள் மற்றும் விவசாய உற்பத்திக்கான கடனுதவிகள், அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கான கடனுதவிகள் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படுகிறது. இக் கடனுதவிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கு அரசாங்க அதிபர் வங்கிகளின் கடனுதவிகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
வெங்காய செய்கையில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை தவிர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெங்காயத் தாள் துப்பரவு செய்யும் இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரங்களின் பாவனை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான பொறிமுறை தொடர்பான கலந்துரையாடலில் மாவட்ட ,பிரதேச செயலக, கிராம மட்டங்களில் நடைபெற்ற கூட்டங்கள்அதன் முன்னேற்ற அறிக்கை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஊடாக வழங்கப்பட்ட உதவித் திட்டங்கள் மற்றும் உணவு பரிமாற்ற சங்கங்களுடாக நடாத்தப்பட்ட உணவு கண்காட்சிகள் , தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறை செயலி( food gate app) ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் மற்றும் உணவு உற்பத்தியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்களது தராதரம்(RPL NVQ level iii )எதிர்பார்க்கப்படுவதால் அதனை பூர்த்தி செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.பிரதேச செயலக ரீதியாக கருவேலை மரங்களுள்ள இடங்களை அடையாளம் கண்டு அதன் புள்ளிவிபரங்ககளை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.சந்தைகளில் பழங்கள் மருந்துப்பாவனையால் தரம் குறைவாக காணப்படுவதாக விவசாயிகளால் முறையிடப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத் துறையினரை பழக்கடைகளை பரிசோதனை செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டது.பழச்செய்கையை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத் தேவைக்கான விதைகளை யாழ் மாவட்டத்திலேயே உற்பத்தி செய்ய ஊக்குவிக்குமாறும் புதிதாக ஆரம்பிக்கும் செயற்திட்டங்களில் கூடுதலாக மா,பலா, நெல்லி போன்ற பயிர்வகைகளில் விவசாயிகளை அதிகமாக உள்வாங்கி ஈடுபடுத்தமாறும் கூறப்பட்டது.
வட்டுக்கோட்டையை சொந்த இடமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சமூக சேவகர் 100,000 கறுவாக்கன்றுகளை பயானாளிகளுக்கு வழங்கியுள்ளதுடன், கறுவாவினை பதப்படுத்தல் முறையில் இயந்திரம் மூலம் செய்து demonstrtaion செய்து காட்டப்படல் , கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டதாக தெரிவித்தமைக்கு ,அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் கறுவாவின் தரத்தினை உறுதிப்படுத்துமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர் வளங்கள் செயற்திட்டங்கள் ஊடாக தொண்டமனாறு வெள்ள அணை வேலையில் மொத்தமாக 75 Km உள்ளதாகவும் 23 km புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் இம்முறை15km செய்ய முடியும் எனவும் குறிப்பாக கரவெட்டி கப்புத்தலை 10 km பொன்னாலை,செம்மணி சம்மேளங்களுக்கான தெளிவுபடுத்தலை குறித்த கால அட்டவணையில் வழங்கியுள்ளதாகவும் தெல்லிப்பளை மற்றும் ஏனைய இடங்களிலும் சம்மேளனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள உள்ளதாக நிப்பாசன பொறியாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2023 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள்,கால்நடை வளர்ப்பு, மீன் உற்பத்தி ,சிறு போக உணவு உற்பத்தி , கருவா , கஜு ,தென்னை பயிர்ச்செய்கை, நீரப்பாசனத்திணைக்கள திட்ட செயற்பாடுகள்,மத்திய பொருளாதார நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி), மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர்,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், இலங்கை வங்கி முகாமையாளர் , பல்கலைக்கழக மாணவர்கள், கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்





