அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான இரண்டாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.08.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது யாழ் மாவட்டத்தில் வறட்சியால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான திட்டங்கள் , சிறுவர்கள் யாசகம் பெறுவது, வியாபாரத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வு பதாகைகள் அமைப்பதற்கான திட்டங்கள்,சிறு கைத்தொழில் சாா் நடவடிக்கையில் ஈடுபடும் துறையினருக்கான ஆரம்ப முதலீடுகளுக்கான உதவித்திட்டங்கள்,உள்நாட்டு வெளிநாட்டு தொழில் சாா் தகைமை சான்றிதழ் மற்றும் பயிற்சிகளுக்கான திட்டங்கள் போன்ற திட்டங்களை உள்வாங்குவதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இ்க்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேசசெயலாளர்கள் மற்றும் IOM, UNDP பிரதிநிதிகள் ,World Vision
SOSChildren Village,We effect FAIR MED FOUNDATION,Humedica,The Halo Trust,Aide et Action,Care For Education,Solidarity Center,Humanity and Inclusion,Search for common Ground Caritas போன்ற சர்வதேச நிறுவனங்ளின் பிரதிநிதிகள் மற்றும் ISAC,Y Gro LTD, Chrysalis, People service Council,RAHAMA,CFCD,LEADS,Oferr(Ceylo), FRC, Paalam, Jaipur,SOND, Avanka Lanka foundation, Shanthíkam, FRIENDS , Foundation of Goodness, Healthy Lanka, Women in Need, Gamnadda,Centre for Women Development,Prathiyangira Trust,Itham,SLRC உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்ளின் பிரதிநிதிகளும கலந்து கொண்டனர்





