IOM நிறுவன நிதி உதவியுடன் OFERR CEYLON மற்றும் CFCD நிறுவனங்களினால் யாழ்ப்பாண மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் இந்தியாவிலிருந்து மீளத்தாயகம் திரும்பியவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பயனாளிகளுக்கு 02 இலட்சம் ரூபா வீதம் தொழில் உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 21.09.2023 மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நல்லூா், யாழ்ப்பாணம் , வேலணை , நெடுந்தீவு, சாவகச்சேரி, உடுவில் ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பயனாளிகளுக்கு ரூபா 02 இலட்சம் வீதம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்






