சீ.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துதல் தொடர்பான அறிவூட்டல் பயிற்சிப் பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 04.10.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் சீ.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் செயல்படுத்தி அறிக்கையை Google forms மூலம் நிகழ்நிலையினூடாக சமர்ப்பிக்கும் நிகழ்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள்அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சி.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் எவ்வாறு செயற்படுத்தல் என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்






