நல்லிணக்க செயன்முறை தொடர்பாக நிர்வாக கிராம அலுவலர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்களுடனான விழிப்புணர்வு கலந்துயாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 19.10.2023 அன்று மு.ப 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர்களான சுசந்த குமார மற்றும் சதுன் லக்மல் , நிர்வாக கிராம அலுவலர் மற்றும் நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
harmony 01 harmony 02 harmony 03 harmony 04 harmony 05 harmony 06