யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக நலன்புரிச்சங்க தலைவரும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளருமான திரு. சுரேந்திரநாதன் தலைமையில் (24.10.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரிச்சங்க போசகருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதோடு, காரியாலய விழாக்களில் ஒன்று கூடலின் சிறப்பு , சமய ,கலாசார, பழக்கங்களை பின்பற்றல் , அரசசேவை தொழில் பாதுகாப்பு அதன் நன்மைகள், மனித இயல்புகள் , ஐம்புலன் பரிமாற்ற செயற்பாடுகள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
 
இந் நிகழ்வின் சிறப்பு சொற்பொழிவாற்ற கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு.வேல்நந்தகுமாா் அவர்களால் "கலைமகள் ஔியில் கவிநூறு பணி" எனும் தலைப்பில் நவராத்திரியின் சிறப்புக்கள் , அலுவலகத்திற்கும் நவராத்திரிக்குமான தொடர்பு , பெண்மையை போற்றுதல் தொடர்பாக சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
 
நவராத்திரி பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கவியரங்கம் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
Vani vizha 01  Vani vizha 02 
 
Vani vizha 03  Vani vizha 04 
 
Vani vizha 05  Vani vizha 07 
 
Vani vizha 06  Vani vizha 08 
 
Vani vizha 09  Vani vizha 10 
 
Vani vizha 11  Vani vizha 12