சுற்றுலா ஊக்கப்படுத்தலில் ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியல் கலைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (31.10.2023) பி.ப 3.00மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியல் கலைகளை பயன்படுத்துதல் தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர், இராமநாதன் ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியல் கலைகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், யாழ் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், துறை சாா் விரிவுரையாளர்கள், வடக்கு மாகாண கலாசார திணைக்கள உதவிப் பணிப்பாளர், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் துறைசாா் திணைக்கள பிரதிநிதிகள்
ஆகியோா் கலந்து கொண்டனர்
 
Tourist 01  Tourist 02 
 
Tourist 03  Tourist 04 
 
Tourist 05  Tourist 06 
 
Tourist 07  Tourist 08