தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் ( 10.11.2023) மு.ப 9.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வு நல்லாட்சி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பாக மக்களின் தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவம் கருதி அரச அதிகாாிகளுக்கு காலத்துக்குக்காலம் விழிப்புணர்வூட்டும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இதில் தகவல் சட்டம் தொடர்பான அறிமுகம், தகவல் சட்டத்தின் தகவல் உத்தியோகத்தர் , பெயர் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களின் கடமைக்குரிய விஷேடமான உறுப்புரைகளை தெளிவுபடுத்தல், 2004/66 ம் இலக்க கட்டளை மற்றும் ஒழுங்குவிதிகளை தெளிவுபடுத்தல், தகவல் சட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளிற்கிணங்க ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடையாளங்காணல் தொடர்பான விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
இச் செயலமர்வில் தகலறியும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க , வெகுசன ஊடக அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர்களான உதானி வருசா விதான, றியாசா எம் நெளபர், எப்ரியல் இளையோர் அமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





