பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 02 தங்கப் பதக்கங்களையும், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமையை பாராட்டி  (29.11.2023) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களினால் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்பாக மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
 
இக் கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
Akilathirunayaki 01 Akilathirunayaki 02
 
Akilathirunayaki 03Akilathirunayaki 04