யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் "நேர்மையான  தேசத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருளில்
இலஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின்  தலைமையில் இன்றையதினம்  (12.12.2023) காலை பத்து மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதோடு, பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்களும் குறிப்பிடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்ட செயலாளர், பிரதம பொறியியலாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
Corruption 01  Corruption 02
 
Corruption 03  Corruption 04
 
Corruption 05  Corruption 06
 
Corruption 07  Corruption 08
 
Corruption 09